தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணைய தளம் வாயிலாக இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாலை போக்குவரத்து நிறுவனம் வாயிலாக வழங்கும் இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பம் செய்ய கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
1. இணையத்தில் பதிவு செய்தல்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணையதளம் http://trainingprovider-tnskill.tn.gov.in என்கிற முகவரிக்குச் செல்ல வேண்டும்.
Registerஎன்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரம் மற்றும் ஆதார் விவரங்களை பூர்த்தி செய்து Submit என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
தங்களுக்கு User Name மற்றும் கடவுச் சொல் (pass word) ஆகியவை கைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
2. இணையம் மூலம் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு விண்ணப்பித்தல்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இணையதளம் http://trainingprovider-tnskill.tn.gov.in என்கிற முகவரிக்குச் சென்று Login என்ற இடத்தை கிளிக் செய்துCandidate Login கிளிக் செய்ய வேண்டும்.
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User Name மற்றும் கடவுச் சொல் (pass word) ஆகியவைகளைப் பயன்படுத்தி உள் செல்ல வேண்டும்.
Sector –ல் ஆட்டோமோட்டிவ் தேர்வு செய்ய வேண்டும்.
Job Roll-ல் Commercial Vehicle Level- IV - ஐஏ தேர்வு செய்ய வேண்டும்.
Institute of Road Transport, Thiruvallur District தேர்வு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க அம்புக்குறி போன்ற இடத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
கேட்கும் விபரங்கள் அளித்து Apply என்ற இடத்தை கிளிக் செய்ய வேண்டும்.
குறிப்பு: பயிற்சி துவங்கும் முன்பு தொலைபேசி வாயிலாக நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு,தகுதிகள் அனைத்தும் தாங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில் அன்றே பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவீர்கள்.