பணியில் உள்ள ஓட்டுநர்களுக்குப் புத்தாக்கப்பயிற்சிகள்
பணியிலுள்ள ஓட்டுநர்களுக்கும், தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாகும் ஓட்டுநர்களுக்கும் கீழ்க்கண்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
1) பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் முறை பற்றிய - 3 நாட்கள்
புத்தாக்கப் பயிற்சி
2) போக்குவரத்து க்கழக முதுநிலை ஓட்டுநர்கள் - 3 நாட்கள்
மற்றும் ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்களுக்கு சாலை விதிமுறைகள் மற்றும்
ஒழுங்குமுறைகள் பற்றிய புத்தாக்கப் பயிற்சி
3) ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி - 1 மாதம்
4) ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கான - 2 நாட்கள்
புத்தாக்கப் பயிற்சி
5) உயிர் சேத விபத்து ஏற்படுத்திய போக்குவரத்துக் - 2 வாரங்கள்
கழக ஓட்டுநர்களுக்கான பயிற்சி
6) கனரக வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான - 1 நாள்
புத்தாக்கப் பயிற்சி
7) கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி - 1 நாள்
ஆசிரியர்களுக்கு தரம் உயர்த்தும் பயிற்சி
8) பள்ளி / கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கான பயிற்சி - 2 நாட்கள்
9) உயிர்சேத விபத்து ஏற்படுத்திய தனியார்
ஓட்டுநர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி - 2 நாட்கள்
10) பணியாற்றும் நிறுவனங்களுக்கே சென்று - 1 நாள்
நடத்தப்படும் புத்தாக்கப் பயிற்சி
மேலும், அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் டேங்கர் ஓட்டுநர்களுக்குக் கீழ்க்கண்ட சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. (மத்திய மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி).
1) அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் - 3 நாட்கள்
டேங்கர் ஓட்டுநர்களுக்கான பயிற்சி
2) அபாயகரமான பொருட்களை ஏற்றிச் செல்லும் - 1 நாள்
டேங்கர் ஓட்டுநர்களுக்கான புத்தாக்கப் யிற்சி
இதுவரை சுமார் 66,519 ஓட்டுநர்கள் இப்புத்தாக்கப் பயிற்சிகளின் மூலம் பயன்பெற்றுள்ளனர்.