சாலை போக்குவரத்து நிறுவனம், தரமணி, திருச்சி பயிற்சி மையம் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனம், ஈரோடு ஆகிய இடங்களில் சி.எம்.வி விதிகள் (ஊஆஏ சுரடநள, 1989) இன் விதி 31 (2) இல் குறிப்பிட்டுள்ள பாடத்திட்டத்தைப் பின்பற்றி 4 வார காலத்திற்கு இலகுரக வாகன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை போக்குவரத்து நிறுவனம், தரமணியில் இரு சக்கர வாகன பயிற்சியும் வழங்கப்பட்டுவருகிறது.
4 வார பயிற்சி பாடநெறியின் முடிவில், பயிற்சி பெற்றவர்கள் ஓட்டுநர் திறன்களில் மதிப்பீடு செய்யப்படுகிறார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிம ஒப்புதலுக்கான மோட்டார் வாகன ஆய்வாளரின் சோதனைக்கு அனுப்பப்படுவார்கள்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை ஆனது பல்வேறு இலவச திறன் மேம்பாட்டு திட்டத்தை (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும்) சாலை போக்குவரத்து நிறுவனத்தின் பல்வேறு கிளைகள் வாயிலாக இலவசமாக நடத்தி வருகிறது. அதன் விபரம் கீழ்வருமாறு.
1. சாலை போக்குவரத்து நிறுவனம் தரமணி கீழே கிளிக் செய்க.
தரமணி சாலை போக்குவரத்து நிறுவனம் இலவச தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம்.
2. சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லுரரி, ஈரோடு கீழே கிளிக் செய்க.
சாலை மற்றும் போக்குவரத்து பொறியியல் கல்லுரரி, ஈரோடு மூலம் இலவச தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம்.
3. சாலை போக்குவரத்து நிறுவனம், திருச்சி கீழே கிளிக் செய்க.
சாலை போக்குவரத்து நிறுவனம், திருச்சி மூலம் இலவச தமிழ்நாடு திறன் மேம்பாட்டு திட்டம்.
இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி பாடநெறி
தகுதி
1. பாடத்தின் பெயர் - இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சி
2. பாடநெறி காலம் - 4 வாரங்கள்
3. குறைந்தபட்ச தகுதி
1) குறைந்தபட்ச வயது. 18 வயது
2) அதிகபட்ச வயது 45 வயது
3) கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பில் குறைந்தபட்ச தேர்ச்சியுடன் தமிழ் கட்டாய மொழி
4) உடலமைப்பு. எந்த குறைபாடும் இல்லாத நல்ல உடலமைப்பு
5) கண் பார்வை. கண்ணாடி அணியாமல், கண் பார்வை தரநிலை (6/6) இல் இருக்க வேண்டும் மற்றும் வண்ண குருட்டுத்தன்மை இல்லாமை.
மேற்கூறிய தகுதிகளை ஆராய்ந்த பின்னர் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பின் அவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பயிற்சி
1) வாகன ஓட்டுநர் பயிற்சி ( Vehicle Driving Practices )
ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் ஓட்டுநர் பயிற்சியானது ஓட்டுநர் பயிற்சி தளம், 1 நெடுஞ் சாலைகள் மற்றும் நகர சாலைகளில் வாகனத்தில் நடைமுறை பயிற்சி அளிக்கப்படும்.
2) கோட்பாடு வகுப்புகள் ((Theory))
சாலை பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்துக் கல்வி, தற்காப்பு ஓட்டுநர் நுட்பங்கள் மற்றும் விபத்து தடுப்பு நடவடிக்கை குறித்து கல்வி கற்பிப்பதில் கோட்பாடு வகுப்புகள் நடத்தப்படும்.
பயிற்சி கட்டணம்
பயிற்சி விவரங்கள் மற்றும் பயிற்சி விவரங்களுக்கான பிற கட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வ.எண் விளக்கம் தொகை ரூ.
1. வாகன ஓட்டுநர் பயிற்சி ( கட்டணம் உட்பட) 6,000.00
2. ஆர்டிஓ கட்டணம் (எல்.எல்.ஆர் + டெஸ்ட் கம் உரிம கட்டணம்) 6,000.00 ஜிஎஸ்டி (18ரூ) 1,800.00 மொத்தம் 7,800.00
பயிற்சி காலம்
22 வேலை நாட்களுக்கு கோட்பாடு வகுப்புகள் மற்றும் நடைமுறை பயிற்சி வழங்கப்படும்
சோதனை
பயிற்சி மையங்களால் நடத்தப்படும் ஓட்டுநர் செயல்திறன் தேர்வில் தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்கள், மோட்டார் வாகன ஓட்டுநர் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக மோட்டார் வாகன ஆய்வாளரின் சோதனைக்கு அனுப்பப்படுவார்கள்.