சாலை போக்குவரத்து நிறுவனம்
தரமணி, சென்னை-113
பயிற்சிக் கட்டணம் செலுத்தி கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியில் சேருவதற்கான அறிவிப்பு
சாலை போக்குவரத்து நிறுவனத்தின் (The Institute of Road Transport) மூலமாக சிறந்த ஓட்டுநர்களை உருவாக்கும் பொருட்டு, 12 வார கால கனரக வாகன ஓட்டுநர் பயிற்சியில் சேருவதற்கு ஆண்/பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி மையங்கள்: (1) கும்மிடிப்பூண்டி, (2) விழுப்புரம், (3) வேலூர், (4) திருச்சி (ஐ,ஆர்.டி), (5) கும்பகோணம், (6) காரைக்குடி, (7) புதுக்கோட்டை, (8) ஈரோடு, (9) பொள்ளாச்சி, (10) மதுரை, (11) திருநெல்வேலி, (12) திண்டுக்கல், (13) நாகர்கோவில், (14) விருதுநகர், (15) சேலம் மற்றும் (16) தருமபுரி.
பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்: (அ) விளம்பரத்தில் குறிப்பிடப்படும் நாளன்று 20 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். (ஆ) குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். (இ) LMV ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு நிறைவடைந்து, PSV Badge பதியப் பெற்றிருக்க வேண்டும். (ஈ) உயரம்: 160 செ.மீ. (உ) எடை: 50 கி.கி. (ஊ) கண்பார்வை நன்றாக இருக்க வேண்டும். (எ) உடல் ஊன குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
பயிற்சிக் கட்டணம்: ரூ.19,500/- + 18% GST சேர்த்து ரூ.23,010/- செலுத்த வேண்டும். (RTO Fees தனி) கும்மிடிப்பூண்டி பயிற்சியாளர்களுக்கு மட்டும் தங்கும் வசதி உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்துடன் “Director, IRT” ” என்ற பெயரில் (Payable at Chennai) ரூ.500/-க்கான வரைவோலையுடன் மாற்றுச் சான்றிதழ், கல்வித் தகுதிச் சான்றிதழ், LMV ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களை (Xerox) இணைத்து “துணை இயக்குநர், சாலை போக்குவரத்து நிறுவனம், ஓட்டுநர் பயிற்சிப் பிரிவு, கும்மிடிப்பூண்டி – 601 201 ” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழு விபரங்களுக்கு www.irtchennai.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும். தொலைபேசி எண். 044-27900328.
இயக்குநர்.
வெளிச்சந்தை வாயிலாக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி சேர்க்கை விண்ணப்பப் படிவம்
பயிற்சி பெற விரும்பும் மையத்தின் பெயர் :
1. பெயர் :
2. தந்தை பெயர் :
3. முழு அஞ்சல் முகவரி :
(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
4. கைபேசி எண். :
5. இனம் / வகுப்பு :
6. பிறந்த தேதி :
7. கல்வித் தகுதி :
8. உயரம் :
9. எடை :
10. ஓட்டுநர் உரிமம் எண் :
11. LMV எடுத்த நாள் :
12. PSV Badge எண் :
13. PSV Badgeஎடுத்த நாள் :
14. ஆதார் எண். :
15. வங்கி வரைவோலை எண் :
நாள் :
தொகை : ரூ. 500/-
வங்கியின் பெயர் :
விண்ணப்பதாரர் கையொப்பம்
இணைப்பு:
1) மாற்றுச் சான்றிதழ் நகல் 2) கல்விச் சான்றிதழ் நகல்
3) ஓட்டுநர் உரிமம் நகல் 4) சாதிச் சான்றிதழ் நகல்
5) ஆதார் அட்டை நகல்