கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சத் தகுதிகள்
1) வயது : விண்ணப்பிக்கும் நாளன்று 20 வயதுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
2) கல்வித் தகுதி : குறைந்தது தமிழை பேசவும், புரிந்து கொள்ளவும் வேண்டும்.
3) உயரம் : குறைந்த பட்சம் 155 செ.மீ.
4) எடை : குறைந்த பட்சம் 40 கி,கி.
5) உடல் தகுதி : அங்கம் மற்றும் அங்க அசைவில் குறைபாடின்றி இருத்தல் வேண்டும்.
6) கண் பார்வைத் திறன் : தகுதி – 1 (6/6) என்ற அளவில் நல்ல பார்வைத் திறன் இருத்தல் வேண்டும். நிறக்குருடு, மாலைக் கண் மற்றும் மாறுகண் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள், 1989-ன்படி, தேவையான தகுதிகள்:
1) இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் 18 வயது நிரம்பிய பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.
2) விண்ணப்பிக்கும் நாளன்று இலகுரக வாகன உரிமம் பெற்று ஒரு வருடம் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
3) ஓட்டுநர் உரிமத்தில் பொதுப்பணி வில்லை பதியப் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், அது 20 வயது நிரம்பிய பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.
4) ஓட்டுநர் உரிமம் காலவதியாகாமல் செல்லத்தக்க நிலையில் இருத்தல் வேண்டும். மேலும், ஏதேனும் காரணங்களுக்காக ஓட்டுநர் உரிமம் முடக்கி வைக்கப்பட்டிருத்தல் கூடாது.