பயிற்சியாளர்களுக்குக் கீழ்க்கண்ட வகுப்பறைப் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
- ஓட்டுநர் கல்வி
- போக்குவரத்துக் கல்வி
- வாகனவியல்
- பொதுமக்கள் தொடர்பு
- நடத்துநர் கல்வி
- முதலுதவி
- வாகனப் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல்
- மனித உறவு மேம்பாட்டுக் கல்வி
கனரக வாகனம் ஓட்டுதலில் கீழ்க்கண்டவாறு பயிற்சியளிக்கப்படுகிறது.
- வாகனம் ஓட்டுதலில் அடிப்படைப் பயிற்சி (பயிற்சி மைதானம்)
- வாகனம் ஓட்டுதலில் திறமைப் பயிற்சி (பயிற்சி மைதானம்)
- கிராமப்புற மற்றும் நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுதலில் பயிற்சி
- நகரச் சாலையில் வாகனம் ஓட்டுதலில் பயிற்சி
பயிற்சி பாடப்புத்தகங்கள்
புதிய மோட்டார் வாகனச் சட்டம், 1988 மற்றும் விதிகள், 1989-ல் வரையறுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்திற்கேற்றவாறு “வாகனம் ஓட்டும் கலை சார்ந்த பாடப்புத்தகங்களும்”, செய்முறைப் படிவங்களும் இந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு பயிற்சியின் போது அளிக்கப்படுகிறது.
தேர்வு
பயிற்சிக் காலங்களில் மாணவர்களுக்கு வகுப்பறைப் பாடங்களிலும், வாகனம் ஓட்டுவதிலும் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்குக் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படுகின்றன.
வேலை வாய்ப்பு
இப்பயிற்சிப் பிரிவு இதுவரை 62,055 ஓட்டுநர்களை உருவாக்கியுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிகின்றனர். இந்நிறுவனத்தில் பயிற்சிப் பெற்ற ஓட்டுநர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.