பயிற்சி பெற விரும்புபவர்களின் குறைந்தபட்சத் தகுதிகள்
கல்வி : தமிழ் மொழியில் பேசும் திறனும், புரிந்து கொள்ளும் திறனும் இருத்தல் வேண்டும்.
வயது : 20 வயதிற்கு மேல்
உயரம் : குறைந்த பட்சம் 155.0 செ.மீ
எடை : குறைந்த பட்சம் 40 கி.கி
ஓட்டுநர் உரிமம்: இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
கண்பார்வை : பார்வை ஸ்டாண்டர்டு-1 ஆக இருக்க வேண்டும்.
நிற பேதமறியும் தன்மை இருக்க வேண்டும்.
உடல் நலம் : எந்தவித உடல் ஊனமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
பயிற்சிக் காலம்
கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி, 12 வாரங்கள் அளிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம்
ஒவ்வொரு பயிற்சியாளரிடமும் பயிற்சியில் சேரும்போது கீழ்க்கண்டவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம் - ரூ.19,500/- (இரண்டு தவணைகளில் செலுத்தலாம்)
விடுதிக் கட்டணம் - ரூ.2,100/- (பயிற்சிக் காலம் முழுமைக்கும்)
திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் சேருகின்ற பயிற்சியாளர்களுக்கு உரிய பயிற்சிக் கட்டணத்தை அரசு செலுத்துகிறது.
சீருடை
பயிற்சியின்போது மாணவர்கள் காக்கி நிறத்தில் சட்டையும், முழுக்கால் சட்டையும் மற்றும் கருப்பு நிற ஷுவும் அணிந்திருத்தல் அவசியம்.
பயிற்றுவிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை
ஆண்டுக்கு அதிகபட்சமாக 1000 பயிற்சியாளர்களுக்குக் கனரக வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்க அனைத்து வசதிகளும் உள்ளன.
பயிற்சியில் சேரும் விதம்